இலங்கையர்களுக்கும் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை?

ekuruvi-aiya8-X3

eagle-flag-usaஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய குடிவரவுத் தடையினால், நியூயோர்க் விமான நிலையத்தில் இலங்கையர்களும் தடுத்து வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சூடான், சோமாலியா, யேமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு, தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி தடை விதித்துள்ளார்.

அமெரிக்க விமான நிலையங்களில், ஏனைய நாடுகளின் பயணிகள் கடுமையாக சோதனையிடப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் நியூயோர்க் ஜோன் எவ் கெனடி விமான நிலையத்தில், இலங்கை உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 71 பேர் தடுத்து, அமெரிக்காவில் நுழைய விடாமல் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள், தடைவிதிக்கப்படாத நாடுகளான, மலேசியா, சீனா, இலங்கை, துருக்கி, பாகிஸ்தான், பிரான்ஸ், அல்ஜீரியா, ஜோர்தான், கட்டார், செனகல், சுவிற்சர்லாந்து, எகிப்து, கினியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

இதனிடையே, அமெரிக்காவுக்குள் நுழைய 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையைத் தளர்த்துமாறு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம், ஐ.நா பொதுச்செயலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share This Post

Post Comment