வடகொரியாவில் இருந்து ஆடை இறக்குமதி செய்ததாக கூறப்படும் செய்தி பொய்யானது

Facebook Cover V02

external_affவடகொரியாவில் இருந்து இலங்கை ஆடை இறக்குமதி செய்ததாக கூறப்படும் செய்தி பொய்யானது என்று இலங்கை வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

அந்த அமைச்சு வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

அக்டோபர் 2017 மற்றும் மார்ச் 2018 காலப்பகுதியில் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு கொரியா ஜனநாயக மக்கள் குடியரசிலிருந்து ஆடை இறக்குமதிகள் தொடர்பான செய்தி அறிக்கைகள் இந்த அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இலங்கை தொடர்பாக செய்தி அறிக்கையில் அடங்கிய தகவல்கள் தவறானவை என இந்த அமைச்சு தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் என்ற வகையில் இலங்கையின் சர்வதேச கடமைகளை பாதுகாகும் விதத்தில் இலங்கை அரசாங்கமானது கொரிய ஜனநாயகக் குடியரசு தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களின் விதிகளுக்கு கட்டுப்படுகின்றது.

அதன்படி ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான உள்நாட்டு ஒழுங்குமுறைகள் தொடர்பான வர்த்தமானிகள் முறையே 06 அக்டோபர் 2017, 19 ஏப்ரல் 2018, மற்றும் 14 மே 2018 இல் வெளியிடப்பட்டுள்ளன. (குறிப்பு : அதிவிஷேட வர்த்தமானி இல. 2039/32, 2067/14 மற்றும் 2071/3)

அந்த தீர்மானங்களை அமல்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிபுணர் குழுவோடு இலங்கை ஒத்துழைக்கிறது. மேலும் அவ்வப்போது பாதுகாப்புச் சபையின் நிபுணர்களின் குழுவால் எழுப்பப்படும் கேள்விகளுக்கான பதில்களை வழங்குகிறது.

இறக்குமதியாளர் / சுங்கத் தொகுதியின் முகவர் மூலம் சுங்க தானியங்கி தரவு செயலாக்க முறையில் ஏற்றுமதி நாட்டின் பெயர் உட்சேர்க்கப்படுகையில் கொரியா குடியரசு என்பதற்கு பதிலாக கொரியா ஜனநாயகக் குடியரசு தேர்வு செய்யப்படுகின்ற பல நிகழ்வுகள் கவனக்குறைவாக நேர்ந்துள்ளன.

இந்த நிபுணர் குழுவிடம் இந்தப் பிழையைப் பற்றி தெளிவுபடுத்தியிருக்கின்ற நிலையில் எதிர்காலத்தில் அத்தகைய பிழைகள் திரும்பத் திரும்ப நிகழாது தடுக்க ஒரு வழிமுறையை இலங்கை சுங்கம் முன்னெடுத்துள்ளது.

Share This Post

Post Comment