பேண்டில் பாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஓட்டிச்சென்ற வாலிபர்!!

ekuruvi-aiya8-X3

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வீரேஷ் காதேமணி என்பவர் தனது பைக்கில் சந்தைக்குச் சென்றுள்ளார்.  பைக்கை மெதுவாக ஓட்டிச் சென்ற வீரேஷ் தனது காலில் ஏதோ ஒன்று ஊர்வதை உணர்ந்துள்ளார். இருப்பினும் சரியாக கவனிக்காத அவர் தண்ணீர் பட்டு பேண்ட் நனைந்திருக்கும் என எண்ணி பைக்கை தொடர்ந்து ஓட்டிச் சென்றார். பின்னர் சந்தையில் பொருட்களை வாங்கிய வீரேஷ் வீடு திரும்புகையில் பேண்டின் கால்பகுதியில் பாம்பின் வால் பகுதியைக் கண்டு அதிர்ந்துள்ளார்.snake-pant
இதையடுத்து பைக்கில் இருந்து குதித்து பக்கத்திலிருந்த கடைக்குள் ஓடி தனது பேண்டை கழற்றி வீசினார். அப்போது பேண்டினுள் இருந்த 2 அடி நீளம் கொண்ட பழுப்பு நிற பாம்பு வெளியே வந்து விழுந்தது. அதை அருகிலிருந்தவர்கள் பிடிக்க முற்பட்டபோது , பக்கத்திலிருந்த கழிவுநீர் தொட்டிக்குள் புகுந்து தப்பித்து விட்டது.
இந்நிலையில் பைக்கை மரத்திற்கு அருகே வீரேஷ் நிறுத்தியதும், அதன் இஞ்சினில் ஏறிய பாம்பு பைக்கை ஓட்ட ஆரம்பித்ததும் சூடேறியதால் அவர் பேன்டுக்குள் சென்றதும் தெரியவந்தது.

Share This Post

Post Comment