வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை தலைவராக தண்டபாணி குப்புசாமி தேர்வு
Apr 26 2012 11:28:32
வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் புதிய தலைவராக முனைவர் தண்டபாணி தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக வட அமெரிக்காவில் உள்ள, ஐக்கிய அமெரிக்கா மாகாணங்களையும் மற்றும் கனடா நாட்டில் உள்ள தமிழ்ச்சங்கங்களை ஒரு குடையின் கீழ்க்கொண்டு வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை இயங்கி வருகிறது. இப்பேரவை எதிர்வரும் ஜூலை 6, 7, 8 ஆகிய நாட்களில் தனது வெள்ளி விழாவை பால்டிமோர் நகரில் கொண்டாடவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த மாதம் 2012-2014 ஆண்டுக்கான புதிய நிர்வாக உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இடப்பெற்ற தேர்தலில் கிட்டத்தட்ட 26 தமிழ்ச்சங்கங்கள், பேரவைப் பேராளர்கள், வாழ்நாள் உறுப்பினர்கள் எனப் பலரும் நேரடியாகப் பங்கு பெற்றிருந்தார்கள்.
இத்தேர்தலில் தலைவராக முனைவர் தண்டபாணி குப்புசாமி (பனை நிலம் தமிழ்ச் சங்கம் - சார்ள்சுடன் - தென் கரோலினா), துணைத் தலைவராக பீட்டர் யெரோணிமூஸ் (வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் - வாசிங்டன் டி.சி.), செயலாளராக பதிவர் பழமைபேசி என்கிற மெளன.மணிவாசகம் (தென்-மத்திய தமிழ்ச் சங்கம் - மெம்ஃபிசு - டென்னசி), துணைச்செயலாளராக செந்தாமரை பிரபாகர் (சார்லட் நகர தமிழ்ச் சங்கம் - வட கரோலினா)
பொருளாளராக தங்கமணி பாலுச்சாமி (அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் - அட்லாண்டா - ஜார்ஜியா) இயக்குனர்களாக பிரகல் திரு (கனடியத் தமிழர் பேரவை - கனடா), கரு மலர்ச்செல்வன் (பேரவை ஆயுட்கால உறுப்பினர் - க்யூசுடன் - டெக்சாசு), யோபு தானியேல் (மிசெளரி தமிழ்ச் சங்கம் - செயிண்ட் லூயிசு - மிசெளரி), சாரங்கபாணி குகபாலன் (இலங்கை தமிழ்ச் சங்கம் - அமெரிக்கா) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்க்ள் என தேர்தல் அலுவலர் திரு.சிவானந்தம் மாரியப்பன்(மின்னசோட்டா தமிழ்ச்சங்கம்) தெரிவித்துள்ளார்.
புதிய நிர்வாகிகள் அனைவரும், ஜூலை மாதம் பால்ட்டிமோர் நகரில் கோலாகலமாய் இடம் பெறவிருக்கும் பேரவை வெள்ளிவிழாவில் தத்தம் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
May 24 2013 07:34:38 [Canada]
மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் இயற்கையாக வளரும் ஒருவகை பூஞ்சையினமான இதைச்
சிலர் பிடுங்கி எறிவதுண்டு. ஆனால் பல நாட்டவரால் விரும்பி
Read More >
May 24 2013 07:30:44 [Canada]
கனடிய விசாக்கள் குறித்து விரிவான விளக்கமளிக்கும் வகையிலும் அதில் ஸ்காபுறோ மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயங்களை தெளிவுபடுத்தும் நோக்கிலும் மக்களின் புகார்களை அரசிடம் கொண்டு
Read More >
May 24 2013 02:31:54 [Canada]
இருதய மற்றும் பாரிசவாத நோய் சம்பந்தமான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முகமாகவும், இந் நோய்களினால் எற்றபடும் உயிர் இழப்புக்களை தடுக்கும் ஆராய்ச்சிகளை
Read More >
May 24 2013 02:21:21 [Canada]
லண்டன் மாநகரில் மக்கள் நெரிசல் மிகுந்த சாலையில் பட்டப்பகலில் ராணுவ வீரர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பிரிட்டனில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் மாநகரின் உல்விச் பகுதியில் நேற்று பிற்பகல் 2.20 மணியளவில்
Read More >
May 24 2013 02:20:13 [Canada]
நேற்று காலை வேளையில் காலேஜ் சுரங்கத தொடரூந்து நிலையத்தில் சில மணி நேரங்கள் பெரும் பரபரப்பு நிலவியது. பெண்மணியொருவர் திடிரென தொடரூந்து நிலையத்தின் தண்டவாளத்தில் குதித்து
Read More >
May 24 2013 02:18:44 [Canada]
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரொறொன்ரோ மாநகர முதல்வர் றொப் போர்ட் கொக்கெய்ன் பிடித்த காணொளியை எப்பாடுபட்டாவது $200,000 கொடுத்து வாங்கி ஒளிபரப்புவோம் என இரு தினங்களுக்கு முன்னர்
Read More >
May 24 2013 02:03:40 [Canada]
பொதுவானதொரு அமைப்பு மட்டுமல்ல , பொது வாழக்கைக்கு வந்து விட்டவர்கள் எந்தத் தவறு செய்தாலும் நேர்மையான ஊடகங்கள் அதனை மக்களுக்கு சுட்டிக் காட்டத்தான் செய்யும். அது ஊடகங்களின் பொறுப்பு
Read More >
May 23 2013 02:22:49 [Canada]
ரொறொன்ரோவின் நிலத்தடி வாகன நிறுத்துமிடம் ஒன்றில் 22 வயதாகும் இளம்பெண் ஒருவர் மூவர் அடங்கிய கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
Read More >
May 23 2013 02:00:14 [Canada]
சோமாலியா கடத்தல் பேர்வழிகளுடன் இணைந்து மாநகர முதல்வர் கொக்கைன் பிடிப்பது போன்ற காணொளிகள் வெளியான சில நாட்களுக்குப் பின்னர், இந்த விடயத்தில் பதில் சொல்ல றொப் போர்ட் நேரடியாக
Read More >