குடிசைப்பகுதியில் நூலகம் நடத்தும் 11 வயது மாணவிக்கு ம.பி. முதல்-மந்திரி ரூ.2 லட்சம் நிதியுதவி

Facebook Cover V02

class-5-student-runs-library-in-slum-chief-minister-pitchesமத்தியப்பிரதேசம் மாநிலம் போபால் நகரில் உள்ள அரேரா குன்று அருகேயுள்ள குடிசைப்பகுதியில் வசிக்கும் 11 வயது சிறுமி முஸ்கான் அஹ்ரிவார். ஐந்தாம் வகுப்பு படிக்கும் முஸ்கான், மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், வீட்டின் வாசலில் நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை கடைவிரித்து, அப்பகுதியில் உள்ள எழுத்தறிவில்லாத பிள்ளைகளுக்கு எழுத்தறிவிக்கும் ‘இறைவி’யாக மாறிவிடுகிறார்.

அப்பகுதியில் உள்ள பிரபல பள்ளிக்கூடம் நன்கொடையாக அளித்த 25 புத்தகங்களைக் கொண்டு தனது வீட்டின் வாசலில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் ’பால புஸ்தகாலயா’ என்ற பெயரில் ஒரு சிறிய நூலகத்தை முஸ்கான் ஆரம்பித்தார்.

அந்த புத்தகங்களில் உள்ள ராஜா-ராணி கதைகள் மற்றும் நமது தாய்நாட்டின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை கதை வடிவில் தனது மழலை மொழியில் படிப்பறிவில்லாத அப்பகுதி பிள்ளைகளுக்கு கற்பிக்கும் முஸ்கானிடம் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன.

படிக்க தெரிந்த சில சிறுவர் – சிறுமியர் இந்த கட்டணமில்லாத நூலகத்தில் இருந்து புத்தகங்களை இரவலாக கொண்டுசென்று, வாசித்துவிட்டு, மறுநாள் கொண்டுவந்து திருப்பி தந்துவிட்டு, வேறு புத்தகங்களைக் கொண்டு செல்கின்றனர்.

வேறு சிலர் முஸ்கான் வீட்டு வாசலிலேயே அமர்ந்து படித்துவிட்டு, ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவரிடம் விளக்கம் கேட்டு தெளிவு பெறுகின்றனர்.

குடிசைப்பகுதியில் அனைவருக்கும் அறிவொளி வீசச் செய்யும் முஸ்கானின் இந்த சேவையை அறிந்த மத்திய அரசு முஸ்கானின் கல்வித் தொண்டை பாராட்டி மத்திய அரசின் சார்பில் இவருக்கு நிதி ஆயோக் திட்டத்தின்கீழ் ‘சிந்தனை தலைவர்’ பட்டம் வழங்கப்பட்டது. நன்றாக படித்து, எதிர்காலத்தில் டாக்டராக வேண்டும் என்பதுதான் எனது எதிர்கால இலட்சியம் என்று கூறிவந்தார்.

muskin-3._L_styvpfஇந்நிலையில், முஸ்கான் நடத்தி வரும் நூலக சேவை குறித்து, மத்தியப்பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ் சவுகானுக்கு தெரிய வந்தது.

இதைதொடர்ந்து, முஸ்கான் அஹ்ரிவாரை தனது வீட்டுக்கு கடந்த புதன்கிழமை வரவழைத்த சவுகான் அங்கு வந்த முஸ்கானிடம் 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

இந்த பணத்தில் நீ விரும்பும் வகையில் நூலகம் கட்டிக்கொள். உனக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அதிகாரிகள் செய்து தருவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முஸ்கின் அஹ்ரிவார் கூறுகையில், ’’எனக்கு சிறு வயது முதல் நூலகம் அமைத்து எனது பகுதி மக்களை முன்னேற்ற வேண்டும் என்பதே ஆசை. அதனால் தான் முதலில் சிறிய அளவில் நூலகம் ஆரம்பித்தேன். ஆனால், கடந்த 7-ம் தேதி எனது தந்தை மனோகர் அஹிர்வார் இறந்தார். அத்துடன் நூலகத்தை மூடிவிட வேண்டும் என நினைத்தேன். ஆனால், எனது தந்தை, ’எப்போதும் பெரியதையே நினைக்க வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும்’ என கூறுவார். அதனால் நூலகத்தை மூடாமல் நடத்தி வருகிறேன்.

எனது சேவைக்கு ஊக்கமளிக்கும் வகையில் முதல்-மந்திரி கொடுத்த நிதியை பயன்படுத்துவேன். விரைவில் எனது நூலகத்தில் 1000 புத்தகங்களாவது இருப்பதற்கு முயற்சி செய்வேன். எனது பகுதியில் உள்ள சிறுவர்கள் மாலையில் வந்து புத்தகங்கள் படித்துச் செலவார்கள். அவர்கள் திருப்பிக் கொடுக்கும் புத்தகத்தில் இருந்து சில கேள்விகள் கேட்பேன். அவர்கள்
விடையளித்தால் சந்தோஷப்படுவேன்’’ என தெரிவித்துள்ளார்.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது எனபதை நிரூபிக்கும் வகையில், சிறிய வயதிலேயே நூலகம் நடத்தி வரும் முஸ்கான் அஹ்ரிவாருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

Share This Post

Post Comment