டெல்லியில் 16,000த்திற்கும் அதிகமான மரங்களை வெட்டுவதற்கு ஐகோர்ட்டு இடைக்காலத் தடை

delhi-treeதெற்கு டெல்லியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டுவசதியை மேம்படுத்துவதற்காக 16,000-த்திற்கும் அதிகமான மரங்களை வெட்டுவதற்கு டெல்லி ஐகோர்ட்டு ஜூலை 2-ம் தேதி இடைக்கால தடையை விதித்துள்ளது.
“சாலைகள் மற்றும் கட்டிடங்களை மேம்படுத்துவதற்காக டெல்லி மரங்களை வெட்ட முடியுமா?” என்று நேஷனல் பில்டிங்ஸ் கன்ஸ்டிரக்ஷன் கார்ப்ரேஷன் லிமிடெட்  (என்பிசிசி) நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.
அரசின் நிறுவனமான என்பிசிசி டெல்லியில் 7 குடியிருப்பு பகுதிகளை மறுமேம்பாடு செய்கிறது. மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட வழக்குகளை ஜூலை 4-ம் தேதி ஐகோர்ட்டும், ஜூலை 2-ம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் விசாரிக்கிறது.
டெல்லியில் மரங்களை வெட்டும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக ஏற்கனவே மக்கள் மரங்களை பாதுகாப்போம் என்று போராட்டம் மேற்கொண்டார்கள். பொதுமக்கள் மொத்தமாக மரங்களை வேலியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் மேற்கொண்டார்கள். இவ்விவகாரம் பா.ஜனதா மற்றும் ஆம் ஆத்மி இடையே மற்றொரு அரசியல் மோதலாகியது.
ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பரத்வாஜ் பேசுகையில், இத்திட்டத்திற்கு மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்த 2017 நவம்பரில் அனுமதியை வழங்கியது, இறுதி அனுமதி டெல்லி ஆளுநர் அணில் பைஜாலால் கொடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார். டெல்லி மாநில சுற்றுசுழல் மற்றும் வனத்துறை மந்திரி இம்ரான் ஹுசைன் பேசுகையில், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தோம் என்றார். மரங்கள் அழிப்பை குறைக்க அல்லது வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய முடியுமா என்பதை சோதனையிட கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டார். ஆனால் மாநில பா.ஜனதா ஆம் ஆத்மி அரசு அனுமதி வழங்கிவிட்டு இப்போது அரசியல் செய்கிறது என குற்றம் சாட்டியது. ஏற்கனவே சுற்றுசுழல் மாசுபாடு காரணமாக அவ்வப்போது பாதிப்பை சந்தித்துவரும் டெல்லியில் மக்கள் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டை நாடினர். இப்போது நீதிமன்றம் மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்துள்ளது.





Related News

  • சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
  • அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
  • கஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
  • சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு
  • சபரிமலை சம்பவம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு முடிவு
  • பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பரபரப்பு பதில்
  • கஜா புயல் எதிரொலி – 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு
  • கஜா புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நாளை ஆலோசனை
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *