ஏடிஎம்களில் பணம் இல்லை – மக்கள் பெரும் அவதி

ekuruvi-aiya8-X3

atm_1211பல மாநிலங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாக மக்கள் புகார் கூறியுள்ளனர்.

கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஆந்திரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பணம் கிடைக்காமல் மக்கள் அவமதிப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான ஏடிஎம்கள் பணம் இல்லாமல் மூடப்பட்டு உள்ளன. இதனால், தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஏராளமான மக்கள், சமூக வலைதளங்களில் புகார் கூறி வருகின்றனர்

மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த சிலர் கூறுகையில்,

பணத்தட்டுப்பாடு இங்கும் உள்ளது. பணம் இல்லாமல், கடந்த 15 நாட்களாக ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளன. பல ஏடிஎம்களுக்கு நடையாய் நடந்தும் பணம் எடுக்க முடியவில்லை என்றனர்.

பிரதமர் மோடியின் தொகுதியான உ.பி., மாநிலம் வாரணாசியை சேர்ந்தவர்கள் கூறுகையில்,

என்ன பிரச்னை என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால், ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் நாங்கள் அவமதிப்பட்டு வருகிறோம். இன்று மட்டும் 5 அல்லது 6 ஏடிஎம்களுக்கு சென்றும் பணம் எடுக்க முடியவில்லை. குழந்தைகள் பள்ளியில் சேர்க்கவும், காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பணம் தேவைப்படுவதாக கூறினர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், நகரின் பல இடங்களுக்கு அலைந்தும் ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியவில்லை. நேற்று முதல் பல ஏடிஎம்களுக்கும் சென்றும் ஒன்றிலும் பணம் இல்லை எனக்கூறினர்.

இதனிடையே, பணத்தட்டுப்பாடு தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் நிதியமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

Share This Post

Post Comment