ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிடும் வாய்ப்பு கூட இப்போது இல்லை

ekuruvi-aiya8-X3

rajapaksheஹம்பாந்தோட்டை துறைமுகம் சம்பந்தமாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வௌியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரையில் உள்ள விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை என்று முன்னாள் மத்திய வங்கியிள் ஆளுநர் அஜித் நிவாட் காப்ரால் தெரிவித்துள்ளார்.

பாரிய கடன் சுமையை நாட்டின் மீது சுமத்தி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு பெற்றுக் கொண்டதாகவும், இதற்கு முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ள அந்த செய்தியில் உண்மையில்லை என்று அஜித் நிவாட் காப்ரால் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது .

அந்தக் கட்டுரையில் கடந்த அரசாங்கத்துக்கும் முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை தான் நிராகரிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னதாக கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அஜித் நிவாட் காப்ரால், அரசாங்கத்தை ஒப்படைக்கும் போதிருந்த 07 ட்ரில்லியன் ரூபா கடன் தற்போது 11.05 ட்ரில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது என்று கூறினார்.

அரசாங்கத்தை பொறுப்பெடுத்தால் அதற்குறிய பொறுப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் ஏற்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் மத்திய வங்கியிள் ஆளுநர் அஜித் நிவாட் காப்ரால் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment