முதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணை கூடாது – லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்

முதல்வர் பழனிசாமி மீதான சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி வசம் உள்ள நெடுஞ்சாலை துறை சார்பில், ஒட்டன்சத்திரம் – தாராபுரம் – அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலை திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு, ஆரம்ப கட்ட திட்ட மதிப்பீடு, 713.34 கோடி ரூபாய். பின், திட்ட மதிப்பீடு, 1,515 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.இப்பணிக்கான ஒப்பந்தம், ‘ராமலிங்கம் அண்டு கோ’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

இந்நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர், முதல்வரின் உறவினர். அதேபோல, திருநெல்வேலி – செங்கோட்டை – கொல்லம் நான்கு வழி சாலை திட்டம், ‘வெங்கடாசலபதி கன்ஸ்ட்ரக் ஷன்ஸ்’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

இதன் உரிமையாளர், முதல்வரின் சம்பந்தி. இவ்வாறு, 4,800 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப் பணிகளை வழங்கியதில், அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளதாக திமுக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரித்து வந்தனர். தமிழக அரசு வசம் உள்ள இந்த துறை விசாரித்தால் நியாயமாக இருக்காது என திமுக தரப்பில் சி.பி.ஐ., விசாரணை கோரப்பட்டது. இதனை ஏற்ற சென்னை ஐகோர்ட் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது.






Related News

  • அரசு முறை பயணமாக வியட்நாம் செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்
  • அய்யப்பன் ஆசிர்வாதமே காரணம் – சபரிமலை தந்திரி
  • நாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல என்பது கூட பிரதமர் மோடிக்கு தெரியாது – ராகுல் காந்தி
  • சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
  • அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
  • கஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
  • சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *