சிரிய மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படாமை குறித்து ஐ.நா அதிருப்தி

ekuruvi-aiya8-X3

aleppoசிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படாமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. சிரியாவின் அலுப்போ பகுதியில் இன்னமும் நிவாரணங்கள் கிடைக்கப் பெறாது மக்கள் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு நிவாரணங்கள் வழங்கப்படாமை அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. அலுப்போ வாழ் மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவசர நிவாரணங்களுக்காக காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவாரணங்கள் உரிய முறையில் விநியோகம் செய்யப்படாமைக்கு அனைத்து தரப்பினரும் பொறுப்பு சொல்ல வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லொறிகளை அனுமதிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

Share This Post

Post Comment