சிறீலங்காவுக்கு வழங்கும் நிதியை நிறுத்துமாறு ட்ரம்பிடம் புலம்பெயர் தமிழ் அமைப்பு கோரிக்கை!

trump12அமெரிக்க அரசாங்கத்தினால் சிறீலங்காவுக்கு வழங்கப்படும் மிலேனியம் சவாலுக்கான நிதியை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் ரொனால்ட் ட்ரம்பிடம் புலம் பெயர் தமிழ் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.

ரொனால்ட் ட்ரம்புக்கான தமிழர் அமைப்பினாலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவுசெய்யப்படவில்லையெனவும், இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு இதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான தீர்வும் கிடைக்கவில்லையெனவும் இந்த அமைப்பினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அமெரிக்காவினால் சிறீலங்காவுக்கு வழங்கப்படும் நிதியை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒபாமா நிர்வாகத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிதியின் ஊடாக வருடாந்தம் சிறீலங்காவுக்கு 900 மில்லியன் டொலர்கள் வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment