நிர்வாக முடக்கல் நடவடிக்கை கைவிடப்பட்ட நிலையில் போராட்டம் வேறு வடிவங்களில் தொடரும் – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு

Facebook Cover V02

yarl_strikeதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ்ப்பாணக் பல்கலைக்கழகச் செயற்பாடுகளை முடக்கும் போராட்டத்தை முன்னெடுத்திருந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தற்போது அதனைக் கைவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. குறித்த போராட்டத்தை வேறு வடிவங்களில் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

கைதிகளின் விடுதலைக்காக யாழ் பல்கலைகழக மாணவர்களுடன் இணைந்து போராடுவோம் என தமிழ் அரசியல்வாதிகள் வழங்கிய உறுதிமொழியை அடுத்து கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளனர். இந்த நிலையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் தாம் மேற்கொண்டுவரும் நிர்வாக முடக்கல் போராட்டத்தை இடைநிறுத்தி, அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதற்கு வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுப்பதற்காகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Share This Post

Post Comment