கல்வி நிறுவனங்கள் நல்லிணக்க மையங்களாக இயங்க வேண்டும் – ஜனாதிபதி

Thermo-Care-Heating

Maithripala-Sirisena25-கல்வி நிறுவனங்கள் நல்லிணக்க மையங்களாக இயங்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்டன நல்லிணக்க மையங்களாக இயங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை பாட விதானத்தில் நல்லிணக்கத்தை பாடமாக புகட்ட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

மீளவும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் கல்வி நிறுவனங்கள் மீளமைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment