படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் நினைவு தினம் எதிர்வரும் 7 ஆம் திகதி!

ekuruvi-aiya8-X3

kirishanthiயாழ்ப்பாணம் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம் எதிர்வரும் 7 ஆம் திகதி செம்மணிப் பகுதியில் அனுஷ்ரிக்கப்படவுள்ளது.

கிருசாந்தியுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களும் இதன் போது நினைவு கூரப்பட்டு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இதன் போது வறுமைக் கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவரகள் 21 பேருக்கு துவிச்சக்கர வண்டிகளும் 63 மாணவர்களுக்கு புத்தகப் பைகளும் வழங்கி வைக்கப்படவுள்ளது.

அன்றையதினம் காலை 8 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்த நினைவு தின நிகழ்வில் சகலரையும் கலந்து கொள்ளுமாறு வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

Share This Post

Post Comment