நிலாவில் மண் சுமந்த பை ரூ.11 கோடிக்கு ஏலம்!

Moon-dust-bag-sold-for-18m-at-New-York-auctionஅமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவுக்கு சென்ற போது அங்குள்ள மண், கல் துகள்களை சேகரிக்க பயன்படுத்திய பை 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 11 கோடி ரூபாய்) அளவுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைல் கல்லாக இருப்பது, நிலாவில் மனிதர்களை களமிறக்கியது தான். 1969-ம் ஆண்டில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அப்பல்லோ 11 என்ற விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் ஆகிய இருவரை நிலாவுக்கு அனுப்பிவைத்தது.

நிலாவில் வெற்றிகரமாக தரையிறங்கிய அப்பல்லோ விண்கலத்திலிருந்து, நிலாவில் முதலில் கால்வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் தனது பெயரை வரலாற்றில் பொறித்துக்கொண்டார். அங்குள்ள மண், கல் துகள்கள் ஆகியவற்றை ஒரு பையில் எடுத்துக்கொண்டு இருவரும் பூமிக்கு திரும்பினர்.

பூமிக்கு விண்கலம் வந்ததும் அதிலுள்ள பொருட்கள் அனைத்தும் ஸ்மித்சோனியன் மியூசியத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், நிலாவின் மண், கல்களை சுமந்த அந்த பை பலரது கைகளுக்கு மாறி நியூயார்க்கில் உள்ள தனியார் நிறுவனத்தின் வசம் வந்தது.

இந்நிலையில், அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பையானது நேற்று ஏலம் விடப்பட்டது. பெயர் வெளியே தெரியாத நபர் ஒருவர் 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 11 கோடி ரூபாய்) மதிப்பில் ஏலத்திற்கு பையை எடுத்துள்ளார். அந்த பையில் இன்னும் மண் துகள்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Related News

 • இந்திய மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு பாகிஸ்தான் நடவடிக்கை
 • சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து 22 பேர் சிக்கினர்
 • தைவானில் ரயில் தடம் புரண்டு விபத்து – 18 பேர் பலி
 • நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர் காலமானார்
 • காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை
 • அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் தலையீடு – ரஷிய பெண் மீது வழக்குப்பதிவு
 • ஜமால் கசோக்கி 2 மூத்த அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்- சவுதி அரேபியா ஒப்புதல்
 • பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *