நிலத்தடி குளிர் சாதனம்

ekuruvi-aiya8-X3

nilathadiஐரோப்பிய ஒயின் தயாரிப்பாளர்கள் முதல், விவசாயிகள் வரை பலர், 19ம் நூற்றாண்டிலேயே ‘ரூட் செல்லார்’ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தினர். அதை நவீனப்படுத்தி இருக்கிறது, டென்மார்க்கைச் சேர்ந்த, ‘வெல்டெவ்ரீ’ நிறுவனம்.

‘கிரவுண்ட் ப்ரிஜ்’ என்ற இந்த குளிர்பதன பெட்டியை பூமிக்கு அடியில் புதைத்துவிட வேண்டும். இதற்குள், அலமாரிகளும், விளக்குகளும், படிகளும் உண்டு. கிரவுண்ட் ப்ரிஜின் திறன், 20 சாதாரண ப்ரிஜ்களுக்கு சமம் என்று சொல்லப்படுகிறது.

இதில், 250 சதுர மீட்டர் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் அல்லது, 500 கிலோ எடையுள்ள உணவுப் பொருட்களை குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கிறது வெல்டெவ்ரீ. பூமிக்கு மேலே என்ன வெப்பநிலை இருந்தாலும், 7 டிகிரி முதல், 15 டிகிரி செல்சியஸ் வரை கிரவுண்ட் ப்ரிஜில் குளிர்ச்சி எப்போதும் இருக்குமாம். இந்த ப்ரிஜ், பூமிக்கடியில் உள்ள குளிர்ச்சியையே பயன்படுத்தும் என்பதால், மின்சாரம் தேவையே இல்லை என்பது தான் இதில் கவர்ச்சிகரமான அம்சம்.

Share This Post

Post Comment