ஸ்காபரோ தீ விபத்தில் நான்கு பேர் காயம்

Thermo-Care-Heating

scoarporo_19கனடா – ஸ்காபரோ பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றின் 7ஆவது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

தெற்கு வாடன் அவனியூவின் ஃபெயர்வெலி கோர்ட்டில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஏழாவது தளத்திலேயே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்புப் படையினர் சுமார் 20 நிமிட போராட்டத்தின் பின்னர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

மேலும் இச் சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ideal-image

Share This Post

Post Comment