பாகிஸ்தான் நாட்டில் பயங்கரவாதிகளே இல்லை – ராணுவ செய்தி தொடர்பாளர்

ekuruvi-aiya8-X3

pak_0209பாகிஸ்தான் நாட்டில் பயங்கரவாதிகளே இல்லை என்றும் அனைவரையும் கொன்று விட்டோம் என்று பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் ஆசிம் சலீம் தேஜ்வா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

‘பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை குறி வைத்து ராணுவம் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தியதில், 3,500–க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். இப்போது நாட்டில் பயங்கரவாதிகளே இல்லை. அனைவரையும் ஒழித்து விட்டோம்’ என்று தெரிவித்தார்.

மேலும், இந்த பயங்கரவாத தடுப்பு வேட்டையில் 337 வீரர்கள் பலியாகி உள்ளனர். 2,272 வீரர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உளவுத்துறையினர் நாடு முழுவதும் பணியாற்றி பயங்கரவாதிகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். 2,600 கி.மீ. தூரமுள்ள ஆப்கானிஸ்தான் எல்லையை கண்காணிப்பதும், 30 லட்சம் ஆப்கான் அகதிகளை பராமரிப்பதும் தான் சவாலான பணிகளாக உள்ளது என்று தெரிவித்தார்.

Share This Post

Post Comment