பெண்ணை இழுத்து சென்ற புலி – மீட்க சென்ற தாய் பரிதாப பலி

ekuruvi-aiya8-X3

China_Tiger26சீனாவில் உள்ள உயிரியல் பூங்காவில், புலியிடம் சிக்கிய, தன் மகளை மீட்க சென்ற தாய், மற்றொரு புலியால் தாக்கப்பட்டு பலியான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் பீஜிங் நகரில், பிரசித்தி பெற்ற உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு, பார்வையாளர்கள், தங்கள் சொந்த வாகனத்தில் சென்று, வன விலங்குகளை பார்வையிடும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், வாகனத்தில் இருந்து இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு குடும்பத்தினர், தங்கள் காரில், அந்த பூங்காவுக்கு சென்றனர். பூங்காவின் மையப்பகுதிக்கு சென்றபோது, கார் டிரைவருக்கும், அதில் இருந்த இளம்பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டது. கோபமடைந்த அந்த பெண், காரை நிறுத்தும்படி கூறி, அதிலிருந்து இறங்கி, பின் இருக்கைக்கு செல்ல முயன்றார். கார் கதவை திறக்க முயன்றபோது, வனப் பகுதியில் இருந்து பாய்ந்து வந்த புலி, அந்த பெண்ணை தாக்கி, இழுத்துச் சென்றது. அப்போது, அந்த பெண்ணின் தாயாரும், மற்றொருவரும், அலறியடித்து, காரில் இருந்து இறங்கினர். புலியிடம் இருந்து, அந்த பெண்ணை மீட்பதற்காக வனப் பகுதிக்குள் ஓடினர்.

உடனடியாக அங்கு வந்த பூங்கா பாதுகாவலர்கள், புலியிடமிருந்து, அந்த இளம் பெண்ணை மீட்டனர். ஆனால், அந்த பெண்ணின் தாயாரை, மற்றொரு புலி, தாக்கி, இழுத்துச் சென்றது. இதில், அவர், பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த இளம் பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் ஒளிபரப்பாகி, பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மிகவும் பரிதாபத்திற்குரியது.

‘பார்வையாளர்கள், தங்கள் சொந்த வாகனத்தில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், காரில் இருந்து இறங்குவதற்கு அனுமதியில்லை. இந்த விதிமுறையை மீறி, தடை செய்யப்பட்ட பகுதியில், அந்த பெண், காரில் இருந்து இறங்கியது தான், இந்த விபரீதத்துக்கு காரணம்’ என, பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share This Post

Post Comment