அகாதி முகாமில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட நபர்

Thermo-Care-Heating

arrest_07சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் கொடூரமாக குத்தி கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள அகதிகள் முகாமில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் அகதிகள் முகாமில் மூன்று பேருக்கு இடையில் அடிதடி ஏற்பட்டுள்ளது.

அப்போது, 27 வயதான நபர் ஒரு கத்தியை எடுத்து இருவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து பொலிசார் வரவழைக்கப்பட்டு இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் 43 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், படுகாயம் அடைந்த 25 வயதான நபர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

அகதிகள் முகாமிற்கு விரைந்துச் சென்ற பொலிசார் ரத்தக் கறையுடன் கத்தியை பிடித்திருந்த நபரை கைது செய்தனர்.

மேலும், தகராறில் ஈடுப்பட்ட மூவரும் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

அகதிகள் முகாமில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் குத்தி கொல்லப்பட்டதற்கான காரணத்தை வெளியிடாத பொலிசார் கைதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ideal-image

Share This Post

Post Comment