அமெரிக்க தடகள வீரர் டைசன் கே-வின் மகள் சுட்டுக் கொலை

ekuruvi-aiya8-X3

dysen_kஅமெரிக்காவை சேர்ந்த பிரபல தடகள வீரர் டைசன் கே. இவர் ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாதனை பட்டம் புரிந்துள்ளார்.

இந்நிலையில் தடகள வீரர் கே-வின் 15 வயது மகள் அமெரிக்காவின் கெண்டக்கியில் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

லெஸிங்டன் போலீசார் இது குறித்து கூறுகையில், “ரெஸ்டாரண்ட் ஒன்றில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கே-வின் மகள் டிரினிடி கே-வின் கழுத்தில் குண்டடிப்பட்டது”  என்று தெரிவித்தனர்.

பின்னர் குண்டடிபட்ட நிலையில் டிரினிடி கே அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.

தனது மகள் உயிரிழந்ததை டைசன் கே தொலைக்காட்சி மூலம் உறுதி செய்தார்.

Share This Post

Post Comment