பிரான்சின் தெருக்களில் ஆறாக பாய்ந்த ஒயின்

ekuruvi-aiya8-X3

Wine-508உள்நாட்டு தேவைக்காக ஸ்பெயின் நாட்டிலிருந்து ஒயினை மலிவான விலையில் பிரான்ஸ் இறக்குமதி செய்து வருகிறது. இதனை உள்நாட்டு மது உற்பத்தியாளர்களும் சில போராட்டக்குழுவினரும் எதிர்த்து வருகின்றனர்.

கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் ஸ்பெயின் நாட்டில் இருந்து சுமார் 4 ஆயிரம் கோடி லிட்டர் ஒயின் வகைகளை பிரான்ஸ் நாட்டு மது வியாபாரிகள் இறக்குமதி செய்துள்ளனர்.

இதனால், கொதிப்படைந்த போராட்டக்காரர்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஸ்பெயின் – பிரான்ஸ் எல்லைப்பகுதி வழியாக ஒயினை ஏற்றிவந்த 5 டேங்கர் லாரிகளை வழிமறித்து சிறைபிடித்தனர். அவற்றில் இருந்த சுமார் ஒரு லட்சம் பாட்டில் அளவிலான ஒயினை வீதியில் கொட்டி நாசப்படுத்தினர்.

இந்நிலையில், சிடே என்ற துறைமுக நகரத்தில் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஒயின் வகைகளை இறக்குமதி செய்து விற்றுவரும் ஒரு கடையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அந்த கடையில் இருந்த ஐந்து ஒயின் பீப்பாய்களை அடித்து உடைத்தனர். பீப்பாய்களில் இருந்து வெளியேறிய ஒயின் அங்குள்ள சாலைகளில் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.

இந்த ஒயின் வெள்ளம் சாலைகள் மட்டுமின்றி அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் கார் பார்க்கிங் பகுதிகளயும் சூழ்ந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share This Post

Post Comment