எதிர்க்கட்சிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு – டெல்லி சென்றார் மம்தா

sdsd

Mamta_17கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். டிசம்பர் 30ந்தேதி வரை வங்கிகளில் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றார். இந்த அறிவிப்பால் பணத்தட்டுபாடு ஏற்பட்டது.

இதனால் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இத்திட்டத்தை கொண்டு வந்த மோடியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.

இது கருப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கை இல்லை. ஏழை மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு எதிரான நடவடிக்கை என்று குற்றம்சாட்டியது. அத்துடன் இத்திட்டம் தோல்வியை தழுவியுள்ளது. அதனால் மத்திய அரசு ரொக்கமில்லா பணபரிவத்தனைக்கு தாவியுள்ளது என்று கூறி வருகிறது.

இத்திடத்தை அறிவித்த மோடி 50 நாட்கள் காத்திருங்கள், அதன்பின் விளக்க அளிக்கிறேன் என்றார். ஐம்பது நாளிற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளன.

இந்நிலையில் இந்த திட்டத்திற்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும் என்று காங்கிரஸ் முடிவு செய்தது. இதற்காக அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தது.

நாளை நடக்கும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லி சென்றுள்ளார். நாளை நடக்கும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு குறித்து மம்தா கூறுகையில் ‘‘சந்திப்பில் கலந்து கொள்வதற்கு காங்கிரஸ் எனக்கு அழைப்பு விடுத்தது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்’’ என்றார்.

இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தி.மு.க., ராஷ்டீரிய ஜனதா தளம் போன்ற கட்சிகளும் பங்கேற்கின்றன. இடது சாரிகள், ஐக்கிய ஜனதா தளம் இதை புறக்கணித்துள்ளன.

Share This Post

Post Comment