முன் ஜாமீனுக்காக போலி ஆவணங்கள் தாக்கல்- சசிகலா புஷ்பா மீது போலீசார் வழக்குப்பதிவு

Facebook Cover V02

sasikala_2509முன் ஜாமீனுக்காக போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக சசிகலா புஷ்பா எம்.பி. மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி எம்.பி. சசிகலாபுஷ்பா மற்றும் அவரது கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் மீது அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த பெண்கள் பாலியல் புகார் கொடுத்து இருந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் கேட்டு சசிகலா புஷ்பா எம்.பி., அவரது குடும்பத்தினர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, வக்கீல் முன்னிலையில் வக்காலத்து மனுவில் கையெழுத்து போடாமல் வெளிநாட்டில் இருந்து கொண்டு வக்காலத்து மனுவில் கையெழுத்திட்டது எப்படி என்று கேள்வி எழுப்பியது.

மேலும் முன் ஜாமீனுக்காக போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது தொடர்பாக ஐகோர்ட்டு பதிவாளர் மதுரை கோ.புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும், புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கடந்த 14-ந்தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவுப்படி சசிகலா புஷ்பா எம்.பி., கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் மீது கோர்ட்டில் தவறான தகவல் தெரிவித்தது, போலியான ஆவணங்களை இணைத்தது, மோசடி செய்தல் என்பது உள்ளிட்ட பிரிவுகளில் கோ.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

Share This Post

Post Comment