இணையதளம் முடங்கியதால் குரூப் 4 விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ekuruvi-aiya8-X3

TNPSCதமிழக அரசு அலுவலகங்களில் இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 தொகுதியின் கீழ் உள்ள 5451 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 எழுத்துத் தேர்வு நவம்பர் 6-ம் தேதி நடைபெறுகிறது.

இதற்காக www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க இன்று (செப்.8) கடைசி நாள் என்றும், வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணத்தைச் செலுத்த செப்டம்பர் 11-ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக 5 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ள நிலையில், இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் விண்ணப்பித்தனர். ஆயிரக்கணக்கானோர் ஒரே சமயத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆவணங்களை பதிவேற்றம் செய்ததால், டி.என்.பி.எஸ்.சி. இணையதளம் முடங்கியது. பலர் விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனர். இதனால் டி.எஸ்.பி.எஸ்.சி. அலுவலகத்தை தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டனர்.

இதையடுத்து எழுத்துத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்டம்பர் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 16-ம் தேதி வரை கட்டணத்தை செலுத்தலாம் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

Share This Post

Post Comment