தோஷம் கழிப்பதாக கூறி இளம்பெண்ணை கற்பழித்த போலி மந்திரவாதி

pool_mandrravatiசென்னையை அடுத்த பெருங்குடி கல்லுக்குட்டையைச் சேர்ந்தவர் நாகமணி(வயது 42). இவருடைய 19 வயது மகள் கடந்த சில தினங்களாக வயிற்றுவலியால் துடித்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அந்த பெண்ணை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இன்னும் திருமணம் ஆகாத அந்த இளம்பெண் கர்ப்பம் ஆனதால் சந்தேகம் அடைந்த டாக்டர்கள், இதுபற்றி துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் இளம்பெண்ணின் தாய் நாகமணியிடம் விசாரித்தனர்.

அப்போது அவர், ‘‘நான் மாதந்தோறும் அமாவாசை அன்று மேல்மலையனூர் கோவிலுக்கு செல்வது வழக்கம். அங்கு மந்திரவாதியான விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த கார்த்திக்(27) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் தான் தோஷம் கழிப்பதாக கூறி எனது மகளை கற்பழித்து விட்டார்’’ என போலீசாரிடம் கூறினார்.

இதையடுத்து துரைப்பாக்கம் போலீசார், போலி மந்திரவாதியான கார்த்திக்கை கைது செய்தனர். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கார்த்திக் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:–

மேல்மலையனூர் கோவிலுக்கு நாகமணி மாதந்தோறும் வரும்போது அவரது குடும்ப கஷ்டங்களை என்னிடம் சொல்வார். இதனால் அவருக்கு தோஷம் இருப்பதாகவும், அதை பூஜை செய்து சரிசெய்து விடலாம் எனவும் அவரிடம் கூறினேன். அதை நம்பி நாகமணியும் பூஜைக்கு வந்தார்.

அப்போது விபூதி தண்ணீரில் மயக்க மருந்து கலந்து அதை நாகமணிக்கு கொடுத்தேன். அவர் அந்த தண்ணீரை குடித்ததும் மயங்கினார். பின்னர் நான் அவரை பலாத்காரம் செய்தேன். அதன்பிறகு நாங்கள் நெருங்கி பழகி வந்தோம். இதனால் நான் நாகமணி வீட்டுக்கும் சென்று வந்தேன்.

அப்போது வீட்டில் அவரது மகளை பார்த்ததும் அவரையும் அடைய எண்ணினேன். அப்போது நாகமணி, தனது மகள் மன அழுத்தத்தில் இருப்பதாகவும், எப்போதும் சோகமாக இருப்பதாகவும் என்னிடம் வேதனையுடன் கூறினார். இதுதான் சரியான சந்தர்ப்பம் என நினைத்த நான், உனது மகளுக்கும் தோஷம் உள்ளது. அதை கழிக்க அவருக்கு தனியாக பூஜை செய்ய வேண்டும். மேல்மலையனூருக்கு அழைத்து வா என்று கூறினேன்.

அதை நம்பி அவரும் மகளுடன் அங்கு வந்தார். அப்போது நாகமணியை மட்டும் பூஜை பொருட்களை வாங்கி வரும்படி கூறி அனுப்பி விட்டேன். அதன் பிறகு நாகமணிக்கு கொடுத்தது போலவே அவரது மகளுக்கும் விபூதி தண்ணீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்தேன். அவர் மயங்கியதும் அவரை கற்பழித்தேன்.

இவ்வாறு கார்த்திக் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலி மந்திரவாதிக்கு உடந்தையாக இருந்ததாக இளம்பெண்ணின் தாய் நாகமணியையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Related News

 • தமிழகம், கேரளாவில் 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு
 • சபரிமலையில் 200 பேர் மீது வழக்கு – போலீசார் குவிப்பு
 • ராம் லீலாவில் ராவணன் வேடம் அணிந்தவரும் ரெயில் விபத்து பலி
 • விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
 • சபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு – தலைமை தந்திரி அறிவிப்பு
 • சபரிமலைக்குள் செல்ல முயன்ற சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரஹானா பாத்திமா – போலீஸ் மீது அரசு காட்டம்
 • பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெண் பத்திரிக்கையாளர் சபரிமலை பயணம் – அய்யப்ப பக்தர்கள் முழக்கம்
 • இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் நல்ல நண்பர்களாக உள்ளனர்- இலங்கை அமைச்சர் சாமிநாதன்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *