
தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா சில நாட்களில் வீடு திரும்புவார் என அப்போலோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
முதல் அமைச்சர் நலமுடன் இருக்கிறார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையினால் வேகமுடன் குணமடைந்து வருகிறார். அவர் வெளிநாடு செல்ல இருக்கிறார் என்று வெளியான தகவல் தவறானது. முதல் அமைச்சருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.