காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாரதீய ஜனதாவில் இணைகிறாரா?

Facebook Cover V02

IRita_pakunaகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரிட்டா பகுகுனா ஜோஷி பாரதீய ஜனதாவில் இணையலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரிட்டா பகுகுனா ஜோஷி விரைவில் பா.ஜனதாவில் இணையலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. லக்னோ கண்டோன்மெண்ட் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ரிட்டா பகுகுனா ஜோஷி பா.ஜனதா அமித் ஷா மற்றும் பிற தலைவர்களை சந்தித்து பேசிஉள்ளார் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன. ஆனால் இந்த யூகங்களை நிராகரித்து உள்ள ஜோஷி சகோதரர் விஜய் பகுகுனா, இது தொடர்பான அனைத்து செய்திகளும் வதந்தியாகும், இதில் உண்மை கிடையாது என்று குறிப்பிட்டு உள்ளார்.
ரிட்டா பகுகுனா ஜோஷி  2007 முதல் 2012 வரையில் உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர். ரிட்டா பகுகுனா ஜோஷி முன்னாள் உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி நாதன் பகுகுனாவின் மகள் ஆவார்.

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பதற்காக சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த தேர்தலில் வெற்றி பெற்று சமீபகாலமாக பல மாநில சட்டசபை தேர்தல்களில் பெற்ற தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தேசிய அளவில் நிலவும் அரசியல் தேக்க நிலையை போக்கவும் காங்கிரஸ் முனைப்புடன் களமிறங்கி உள்ளது.

இதற்காக டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித்தை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.

Share This Post

Post Comment