இலங்கை அதிபர் சிறிசேனா திருமலைக்கு இன்று வருகை

Thermo-Care-Heating

srisena_1308திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தனது குடும்பத்தினருடன் விமானம் மூலம் நேற்று பெங்களூரு வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் சித்தூர், திருப்பதி வழியாக இரவு 8.30 மணிக்கு திருமலையை சென்றடைந்தார். ஆந்திர மாநில வனத்துறை மந்திரி கோபாலகிருஷ்ணாரெட்டி, திருப்பதி சுகுணா எம்.எல்.ஏ. மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் வரவேற்றனர். திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விடுதியில் குடும்பத்தினருடன் தங்கினார்.

அதைத்தொடர்ந்து இலங்கை அதிபர் சிறிசேனா இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுப்ரபாத சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் காலை 9 மணிக்கு திருமலையில் இருந்து காரில் புறப்பட்டு பெங்களூரு சென்று அங்கிருந்து விமானம் மூலம் இலங்கை திரும்புகிறார்.

ideal-image

Share This Post

Post Comment