சிகிச்சைக்கு சென்ற பிளஸ்–1 மாணவிக்கு பாலியல் தொல்லை

ekuruvi-aiya8-X3

dr_kozhikode18கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர் டாக்டர் நாராயணன். இவர் வீட்டில் தனியாக கிளினிக் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது கிளினிக்கிற்கு அப்பகுதியைச் சேர்ந்த பிளஸ்–1 மாணவி ஒருவர் சிகிச்சைக்கு சென்றார். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவி சோகத்துடன் காணப்பட்டார்.

பள்ளியிலும் அவர் சக தோழிகளுடன் பேசுவதை தவிர்த்தார். வகுப்பில் பாடங்களையும் கவனிக்கவில்லை. இதுபற்றி பள்ளி ஆசிரியைகள் மாணவியை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அப்போது மாணவி, ஆசிரியைகளிடம் சிகிச்சைக்கு சென்ற இடத்தில் டாக்டர் நாராயணன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை கூறி அழுதார். இதுபற்றி ஆசிரியைகள் சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் சம்பவம் பற்றி விசாரித்து நல்லாம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியதோடு, நேற்று டாக்டர் நாராயணனை கைது செய்தனர். அவர் மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் அவரை கோழிக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, டாக்டர் நாராயணனை 2 வாரம் காவலில் வைக்க உத்தரவிட் டார். இதையடுத்து டாக்டர் நாராயணன் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Share This Post

Post Comment