விமான நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறிய அதிகாரி

ekuruvi-aiya8-X3

sus711மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மோனிகா காங்கேம்பம் என்ற பெண் கடந்த ஒன்பதாம் தேதி வெளிநாடு செல்வதற்காக டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு வந்துள்ளார். அவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்த குடியுரிமைத்துறை அதிகாரி ஒருவர், ‘உன்னை பார்த்தால் இந்தியப் பெண்ணைப்போல் தெரியவில்லையே?’ என்று கிண்டல் அடித்துள்ளார்.

விமானத்துக்கு தாமதமாகும் கடுப்பில் நின்றிருந்த அந்தப் பெண்ணை மேலும் சீண்டிப்பார்க்கும் வகையில், நீ ‘பக்கா’ இந்தியப் பெண் தானா? என்றும் கேட்டார். அப்படி இந்தியப் பெண்ணாக இருந்தால் நமது நாட்டில் எத்தனை மாநிலங்கள் உள்ளன? அதேபோல், மணிப்பூர் மாநிலத்தின் எல்லையோரம் உள்ள மற்ற மாநிலங்களின் பெயர்களை எல்லாம் சரியாக சொல் பார்ப்போம். என்று நக்கலடித்துள்ளார்.

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை மோனிகா காங்கேம்பம் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார். இது, ‘ஷேர்கள்’ மூலமாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பார்வைக்கு சென்றது.

அந்த பெண்ணுக்கு நேர்ந்த அவமரியாதைக்காக தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ள சுஷ்மா, குடியுரிமைத்துறை அதிகாரியின் செய்த தவறுக்காக மன்னிப்பும் கேட்டுள்ளார். அந்த அதிகாரிமீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தனது துறையிடம் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், இதுதொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் பேசுவதாகவும் உறுதி அளித்துள்ளார்.

Share This Post

Post Comment