மனைவி, பிள்ளைகளை காரோடு தீ வைத்து எரித்த கணவர்

Thermo-Care-Heating

fire_0808சென்னை நந்தனம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில், பெண் ஒரு பலியானார். அதில் இருந்த குழந்தைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன.

விபத்து போல ஜோடிக்கப்பட்ட இந்த சம்பவத்தில், பலியான பெண் பிரேமா என்பதும், அவர் தேனாம்பேட்டை ஆலையம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது மனைவி என்பதும் தெரிய வந்தது.

காரில் தீப்பிடித்த நிலையில், காரை ஓட்டி வந்த நாகராஜ், தப்பியோடியுள்ளார். பலத்த காயமடைந்த பிரேமா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர் உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். அவரது பிள்ளைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரேமா, மரணம் அடைவதற்கு முன்பு, தனது கணவரே தங்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாக மரண வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து, நாகராஜ் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை தேடி வந்த நிலையில், சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் இன்று நாகராஜ் சரண் அடைந்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ideal-image

Share This Post

Post Comment