5 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் மலேரியா நோய்

Facebook Cover V02

mosquiteo_0707உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மலேரியா நோய் தற்போது டெல்லியில் பரவத் தொடங்கி உள்ளது. எனவே, காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மலேரியா அறிகுறி தென்பட்டால் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், கிழக்கு டெல்லியின் மண்டவாலி பகுதியைச் சேர்ந்த பிரவீன் ஷர்மா (30) என்பவர் மலேரியா காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். மலேரியாவின் தாக்கம் காரணமாக உடல் உறுப்புக்கள் செயலிழந்த நிலையில், மேக்ஸ் மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக சப்தர்ஜங் மருத்துமவனையில் சேர்த்தபோது அவர் பலியானதாக தெரியவந்துள்ளது.

ஆனால் அவரது உடல் நிலை மோசமானது குறித்து தங்களிடம் எதையும் தெரிவிக்கவில்லை என்று மேக்ஸ் மருத்துவமனை நிர்வாகம் மீது அவரது தந்தை குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேசிய தொற்றுநோய் கட்டுப்பாட்டு திட்ட இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, 2012-ம் ஆண்டில் இருந்து இதுவரையில் மலேரியா நோய்க்கு டெல்லியில் உயிரிழப்பு ஏற்படவில்லை. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் பலியாகி உள்ளார். இந்த சீசனில் இதுவரையில் 19 பேருக்கு மலேரியா பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment