ஐ-பாட் மூலம் தேர்வுகளை நடத்தும் புதிய முறை – சத்தியபாமா பல்கலைக்கழகம்

Thermo-Care-Heating

satyabama_UNIசென்னையில் அமைந்துள்ள சத்தியபாமா பல்கலைக்கழகம் தங்கள் கல்வி நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது குறித்து சத்தியபாமா பல்கலைக்கழக இயக்குனர் டாக்டர். மரியசினா ஜான்சன் அவர்கள் கூறுகையில் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை டிஜிட்டலாக மாற்ற முடிவு செய்துள்ளோம்.

இதன் முதற்கட்டமாக எழுத்து தேர்வுகளை ஐபாட்-இல் நடத்தவுள்ளோம். பல்கலைக்கழக தேர்வின் போது ஐபாட்கள்  வழங்கப்படும். தேர்வு முடிந்ததும், மாணவர்களின் அனைத்து விவரங்களும் பல்கலைகழகத்தின் மையக் கணினிக்கு மாற்றப்படும். தேர்வு முடிவுகளும் உடனடியாக அறிவிக்கபடும்.

எம்.ஏ (ஆங்கிலம்) மற்றும் எம்.பி.ஏ ஆகிய இரண்டு துறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் மாதிரி தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் மாணவர்கள் எளிதாக ஐபாட்-ஐ பயன்படுத்தி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். இம்முயற்சி வெற்றியடைந்தால் அனைத்து துறைகளுக்கும் விரிவுபடுத்த முடிவுச் செய்துள்ளோம்.

ideal-image

Share This Post

Post Comment