காஷ்மீரில் தொடரும் வன்முறை

Facebook Cover V02

kashmir_0409காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து அங்கு கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வன்முறை தலைவிரித்தாடுகிறது.  டிரால் பகுதியில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது மர்மநபர்கள் சிலர் மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த, டிரால் தொகுதி எம்.எல்.ஏ. முஷ்தாக் அகமத் ஷா வீட்டின் மீது கல்வீசி தாக்கினார்கள். ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தினார்கள். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து பாதுகாப்பு படையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

Share This Post

Post Comment