சுவாதி கொலை வழக்கு – ராம்குமாரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

ekuruvi-aiya8-X3

E_ramkumarசென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி சுவாதி என்ற இளம்பெண் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார்(24) கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுக்கு தேவையான ஆதாரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது.  புழல் சிறையில் அடையாள அணிவகுப்பும் நடத்தப்பட்டது.

இந்நிலையில், ராம்குமாரின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையடுத்தி, பாதுகாப்பு கருதி கடந்த மாதம் வீடியோ கான்பரன்சிங் மூலம் கோர்ட் விசாரணைக்காக எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ராம்குமாரிடம் நீதிபதி விசாரணை நடத்தி, நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

அந்த காவல் முடிவடைந்ததையடுத்து இன்று மீண்டும் ராம்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Share This Post

Post Comment