தி.மு.க.வில் சேர திட்டமா? – சசிகலா புஷ்பா

ekuruvi-aiya8-X3

sasikala_pushpaசசிகலா புஷ்பா எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம்:-

கேள்வி:- டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவா எம்.பி.யை தாக்கினீர்கள். ஏன் அப்படி ஆத்திரமாக நடந்து கொண்டீர்கள்?

பதில்:- முதலில் நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். திருச்சி சிவா பல ஆண்டு அரசியல் அனுபவம் வாய்ந்தவர். மரியாதைக்குரிய நபர்.

நாங்கள் இருவரும் சென்னை விமானத்தை பிடிப்பதற்காக டெல்லி விமான நிலையத்தில் இருந்தோம். அப்போது அவர் அ.தி.மு.க. தலைமை பற்றி விமர்சித்ததால் நான் கோபம் அடைந்து அப்படி நடந்து கொண்டேன். நான் அ.தி.மு.க.வில் வளர்ந்தவள். தி.மு.க.வுக்கு எதிரான கொள்கை கொண்டவள். அதன் மூலம் உள்ளாட்சி பதவி மற்றும் எம்.பி. பதவிக்கு வந்தவள்.

கே:- நீங்கள் இருவரும் சிறந்த நண்பர்கள் என்று கூறப்படுகிறதே?

ப:- இதை நான் வன்மையாக மறுக்கிறேன். அ.தி.மு.க.காரர்கள் மற்றும் கட்சியில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தி.மு.க. உறுப்பினருடன் பேசுவதற்கு அனுமதி இல்லை. மற்ற கட்சிகளில் மாற்று கட்சியினருடன் பேசுவதை பார்க்கலாம். நான் எம்.பி.யாக பதவி ஏற்ற போது கூட, எனக்கு வாழ்த்து சொல்லிய தி.மு.க. எம்.பி.க்களுக்கு பதில் கூற முடியாத நிலையில்தான் இருந்தேன்.

கே:- இனி நீங்கள் அ.தி.மு.க.வில் நீடிக்க முடியாது. உங்களின் அடுத்த அரசியல் நடவடிக்கை என்ன?

ப:- நான் அ.தி.மு.க.வில் பாராளுமன்றத்திலும், கட்சி விவகாரங்களிலும் ஓரம் கட்டப்பட்டேன். எனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது.

கே:- உங்கள் சம்பந்தமான பிரச்சினை வந்தபோது, தி.மு.க. தலைமைக்கு நன்றி தெரிவித்தீர்கள். இதனால் நீங்கள் தி.மு.க.வில் சேரப்போவதாக பேசப்படுகிறதே?

ப:- நான் காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்தேன். எனக்கு பாதுகாப்பு அளித்ததற்காக மத்திய உள்துறைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்போதும் நான் அதே கட்சியில் தான் இருக்கிறேன். அதே நேரத்தில் சுய மரியாதையோடு இருக்க வேண்டும் என கருதுகிறேன். நான் எந்த கட்சியிலும் சேர விரும்பவில்லை. தற்போது நான் நடுநிலைமையான ஒரு பாராளுமன்ற உறுப்பினர். எனது பதவி காலம் முழுவதும் இது நீடிக்கும்.

கே:- உங்கள் குடும்பத்தினர் மீது வேலைக்கார பெண்களால் செக்ஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளதே?

ப:- இந்த சம்பவம் 2011-ம் ஆண்டு நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால், 2016-ம் ஆண்டு என் மீது புகார் கொடுத்துள்ளார்கள். அவர்கள் ஏழை சிறுமிகள். என் மீது புகார் கொடுக்கும்படி கட்டாயப் படுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

Share This Post

Post Comment