தமிழகத்தில் பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும்

Facebook Cover V02

SCHOOLகாவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (16ம் தேதி) முழுக்கடையடைப்பு நடத்த பல்வேறு வணிகர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இதற்கு தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ., இடது சாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆளும் அதிமுக இது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.

மறியல் போராட்டம் நடத்துவோம் என பல்வேறு அமைப்புகள் அறிவித்துள்ளதால், ரெயில்கள், பஸ் போக்குவரத்து பாதிக்கும் என தெரிகிறது. சென்னை முழுவதும் சினிமா தியேட்டர்கள் காலை, மதியம் காட்சிகள் ரத்து செய்யப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நாளை வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அதற்காக ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தனியார் மெட்ரிக் பள்ளிகள் நாளை இயங்காது என்று தமிழ்நாடு சங்க தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment