சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொள்ளை முயற்சி முறியடிப்பு

ekuruvi-aiya8-X3

train_1308சண்டிகரில் இருந்து மதுரைக்கு வரும் சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு உத்தர பிரதேச மாநிலம் நக்வால்-டாப்ரி பகுதிக்கு இடையே வந்துகொண்டிருந்தது. அப்போது ரெயில் பெட்டிக்குள் இருந்த ஒரு கும்பல் திடீரென அவசர சங்கிலியை பிடித்து ரெயிலை நிறுத்தினர். ரெயில் நின்றதும் பயணிகளிடம் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடிக்கத் தொடங்கினர்.

ரெயில் நின்றதால் ரெயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட பெட்டிக்கு விரைந்து வந்து கொள்ளைக் கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க முயன்றனர். கொள்ளைக் கும்பலும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட, இருதரப்புக்குமிடையே சிறிது சண்டை நடந்தது.

பின்னர் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனனர். இந்த சம்பவத்தால் ரெயில் பயணிகளிடையே பீதி ஏற்பட்டது. சரியான நேரத்தில் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து நடவடிக்கை எடுத்ததால் மிகப்பெரிய கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டது.

Share This Post

Post Comment