பெங்களூரில் மீண்டும் வன்முறை

Facebook Cover V02

Blore_1209காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்து விட்டதைக் கண்டித்து பெங்களூர் முழுவதும் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக இல்லாததால் இந்த பேராட்டம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக பெங்களூரில் வசிக்கும் தமிழக மக்களின் கடைகள் மற்றும் வீடுகளை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி வருகின்றனர். தமிழக பதிவெண் கொண்ட வாகனங்ககள் தாக்கப்பட்டு தீ வைக்கப்படுகின்றன.

போராட்டத்தால் பெங்களூர் நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என காவல்துறை விளக்கம் அளித்தது.

போராட்டத்தின் எதிரொலியாக பெங்களூர் நகரம் முழுவதும் மெட்ரோ ரெயில், போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர சென்னை கோயம்பேட்டில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் 4௦ கர்நாடக அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு அவற்றுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment