விபத்தினால் ரத்த வெள்ளத்தில் துடித்தவரை காப்பாற்றாமல் செல்போனை திருடிய நபர்

Facebook Cover V02

accident_cellphoneடெல்லியில் உள்ள ஹரி நகர் பகுதியில் நேற்று அதிகாலை நடந்து சென்ற ஒருவர் மீது வேன் படுவேகமாக மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவர் ரோட்டில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தார். அப்பகுதி வழியாக செல்பவர்கள் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் அவரை காப்பாற்றாமல், மனதளவில் மட்டும் வருந்தி விட்டு கடந்து செல்கின்றனர்.

மற்றொருவனோ ரத்த வெள்ளத்தில் கிடக்கும் அந்த மனிதரைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கீழே கிடக்கும் அவருடைய செல்போனை எடுத்து செல்கிறான். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் இந்த சம்பவம் அனைத்தும் பதிவாகி இருந்தது.

இந்த விபத்து குறித்து, காலை 7 மணிக்கு போலீசாரின் கவனத்திற்கு சென்ற பிறகு, போலீசார் அப்பகுதிக்கு வந்தனர். அதற்குள் அந்த நபர் இறந்துவிட்டார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி உள்ளனர்.

விபத்தில் இறந்த நபர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மதிபுல் (35) என்பவரும், டெல்லியில் உள்ள திகார் கிராமத்தில் தங்கி காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் சாலையைக் கடந்துசென்ற ஒருவர் நினைத்திருந்தால்கூட அவரது உயிரை காப்பாற்றி இருக்கலாம்.

எங்கே போனது மனிதாபிமானம்?  இப்படி நடந்துக் கொள்வது தான் மனிதநேயமா ?

Share This Post

Post Comment