ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்

Facebook Cover V02

kerala_petrolகேரளாவில் சாலை விபத்தில் சிக்கி பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது.

இதனை கட்டுப்படுத்தவும், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கவும் மாநில அரசு திட்டமிட்டது. இதனை போக்குவரத்து கமி‌ஷனர் டோமின் தச்சங்கிரி கடுமையாக செயல்படுத்த பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி, இரு சக்கர வாகனங்களில் வருவோர் பங்க்குகளில் பெட்ரோல் வாங்க வேண்டுமென்றால் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என்று கூறி இருந்தார். முதல் கட்டமாக திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய 3 நகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுமென்றும் அறிவித்தார்.

இந்த உத்தரவு நேற்று முதல் 3 நகரங்களிலும் அமலுக்கு வந்தது. முதல் நாளன்று ஹெல்மெட் அணியாமல் பங்க்குகளுக்கு வந்தவர்களுக்கு அரசு சார்பில் ஹெல்மெட்கள் விநியோகிக்கப்பட்டது.

அவர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இதனை கொச்சியில் போக்குவரத்து துறை மந்திரி சசீந்திரன் தொடங்கி வைத்தார். ஹெல்மெட் அணியாமல் வந்த வாலிபர்களுக்கு அவர் அறிவுரை கூறி ஹெல்மெட்டும் வழங்கினார்.

இது தவிர ஹெல்மெட் அணிந்து பெட்ரோல் வாங்க வருபவர்களுக்கு ஒவ்வொரு பெட்ரோல் பங்க்கிலும் இனி கூப்பன்கள் வழங்கப்படும். அதில், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு இலவச பெட்ரோல் வழங்கவும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முன் வந்துள்ளனர்.

Share This Post

Post Comment