நாட்டின் பாதுகாப்பிற்காக மத்திய அரசுடன் காங்கிரஸ் துணை நிற்கும் – சோனியா

sonia_gandhi04பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இரு நாடுகளிடையே தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், ராணுவ தாக்குதல் குறித்து சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இதில் முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி, நாட்டின் பாதுகாப்பிற்காக மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் துணை நிற்கும் என்று தெரிவித்தார்.

மேலும் சோனியா கூறுகையில், “இந்தியாவிற்கு எதிராக எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதல் நடைபெற்று வருவதற்கு தங்களுக்கு பொறுப்பு உள்ளது என்பதை தற்பொழுதாவது பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளும் என்று காங்கிரஸ் நம்புகிறது.

மேலும் உள்நாட்டில் உற்பத்தி ஆகும் தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment