திமுக தலைவர் கருணாநிதியுடன் அழகிரி திடீர் சந்திப்பு

Thermo-Care-Heating

karuna_azhagiriதிமுக தலைவர் கருணாநிதி ஒவ்வாமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.  இதனால் சில நாட்களுக்கு பார்வையாளர்கள் அவரை காண வருவதை நிறுத்தி ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அக்கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கருணாநிதியை அவரது மகன் அழகிரி இன்று திடீரென சந்தித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது அழகிரி மகன் தயாநிதி உடன் இருந்தார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் கருணாநிதியை அழகிரி சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு வார இதழ் ஒன்றிற்கு கருணாநிதி அளித்த பேட்டியில், மு.க. ஸ்டாலினே என் அரசியல் வாரிசு. மு.க.அழகிரியை நினைத்து ஏங்கவில்லை என்று வெளிப்படையாக பேசியிருந்தார்.

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 25 தேதி, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில், மு.க.அழகிரி- கருணாநிதி இடையிலான இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ideal-image

Share This Post

Post Comment