காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடக எம்.பி.க்கள் எதிர்ப்பு

ekuruvi-aiya8-X3

india_2709தமிழகத்திற்கு 3 நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது.

மேலும், “உயர் அதிகாரிகள் தலைமையில் மேலாண்மை வாரியம் குறித்து ஆலோசிக்க வேண்டும். இரு மாநில உயர் அதிகாரிகள் தலைமையில் விரிவாக விசாரணை நடத்த வேண்டும்” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக மாநில எம்.பி-க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அவர்கள் தங்களது கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

காவிரி நதி நீர் பிரச்சனையில் பிரதமர் தலையிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் தேவையற்றது. 4 மாநில முதல்-அமைச்சர்களின் கூட்டத்தை மத்திய அரசு நடத்த வேண்டும். நதி நீர் பங்கீடு குறித்து இரு மாநிலங்களிடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மத்திய அரசு அடுத்த 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் கடந்த 20-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment