ஏ.டி.எம். சென்டர்கள் மூடியே கிடக்கின்றன – மம்தா

Facebook Cover V02

mamtha_banerjeகருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிப்பதற்காக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி அறிவித்தார். வியாழக்கிழமையில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்குப் பதிலாக புதிய நோட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று ஆர்.பி.ஐ. அறிவித்தது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்று அறிவித்தது.

ஆனால், தற்போது 2000 ஆயிரம் மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே வழங்கப்பட்டு, 500 ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்படாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 100 ரூபாய் நோட்டுக்கள் சரியாக கிடைக்கவில்லை என்ற புகாரும் கிளம்பியுள்ளது. அத்துடன் ஏராளமான ஏ.டி.எம். மையங்களும் செயல்படாமல் உள்ளன.

ஓரிரு நாட்களுக்குள் இந்த பண மாற்றம் முடிந்து விடும் என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால், மக்கள் நினைத்தவாறு அவ்வளவு எளிதாக இந்த பிரச்சினை முடிவதாக தெரியவில்லை. மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டதும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.

மக்கள் பயப்படத் தேவையில்லை, போதுமான அளவு பணம் கையிருப்பு உள்ளது என்று ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளதே, பொதுமக்கள் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் சென்டர்களில் எவ்வாறு பணத்தை செலுத்துகிறார்கள்? எப்படி பணத்தை பெறுகிறார்கள்? என்பதை பார்ப்பதற்காக பவானிபூர் மற்றும் சவ்ரிங்கீ பகுதிகளில் உள்ள சில வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். சென்டர்களுக்கு சென்று மம்தா பானர்ஜி பார்வையிட்டார்.

அப்போது மக்கள் படும் அவஸ்தையைக் கண்டு பெரும் கவலையடைந்தார். அத்துடன் மத்திய அரசு மீது பயங்கரமாக குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில் ‘‘வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்களில் பணம் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கும் அனைவரும் அப்பாவி பொதுமக்கள். மத்திய அரசு உண்மையான குற்றவாளிகளை கைது செய்யட்டும்.

காலையில் இருந்து நான் பல வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். சென்டர்கள் சென்று பார்வையிட்டேன். மக்களுக்கு எதிரான, மோசமான திட்டத்தை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்று மக்களிடம் கேட்டேன். கருப்பு பணத்தை வைத்துள்ளவர்கள் யாரும் அங்கு நீண்ட வரிசையில் நிற்கவில்லை.

மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இந்த திட்டம் மக்களுக்கு பெரிய துன்பத்தை கொடுத்துள்ளது. பெரும்பாலான ஏ.டி.எம். சென்டர்கள் மூடியே கிடக்கின்றன. வேறு எங்கிருந்து சாதாரண மனிதன் பணத்தைப் பெற்று குடும்பம் நடத்துவான்?

வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுக்களை வழங்குகிறது. அவர்கள் தினசரி சேவைக்கு இந்த நோட்டை எவ்வாறு பயன்படுத்துவார்கள். குறைந்த பண மதிப்பான 50 ரூபாய், 100 ரூபாய் நோட்டுக்கள் சாதாரணமான மக்களுக்கு கிடைப்பதில்லை. அவர்கள் மிகவும் கோபமாகவும், குழப்பமாகவும் உள்ளார்கள்’’ என்றார்.

Share This Post

Post Comment