ஜி20 மாநாட்டிற்காக சீனா சென்றடைந்தார் பிரதமர் மோடி

Facebook Cover V02

modi_0309சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறும் உச்சி மாநாட்டில் ஜி-20 அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சீனா சென்றுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது வியட்நாம் பயணத்தை முடித்துக்கொண்டு ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றடைந்தார்.

வியட்நாம் விமான  நிலையத்தில் இருந்து சீனாவின் ஹாங்சோ விமான நிலையத்திற்கு சென்ற மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ளும் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார்.

கடந்த மூன்று மாதங்களில் சீன அதிபரை மோடி இரண்டாவது முறையாக சந்திக்க உள்ளார். முன்னதாக தாஷ்கண்டில் ஜூன் மாதத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இருவரும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment