நல்லூரில் புதிய வடிவிலான ஜஸ்கிரீம் விற்பனை நிலையம்

Thermo-Care-Heating

icecream_230816நல்லூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமான நிலையில் வெகு சிறப்பாக இடம்பெற்று வருக்கின்றது.

நல்லூரை நோக்கி நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் படையெடுத்துள்ள நிலையில், புதிய வடிவிலான ஜஸ்கிரீம் விற்பனை நிலையம் ஒன்று அங்கு அமைக்கப்பட்டுள்ளது.

புது வகையான உத்தியை கையாண்டு மக்களைக் கவரும் வகையில் விமான வடிவிலான ஜஸ்கிரீம் விற்பனை நிலையம் ஒன்று நல்லூர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மக்களை கவர்ந்திழுக்கும் அந்த விமானத்திற்குள் ஜஸ்கிரீம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆலயத்திற்கு வரும் மக்கள் ஜஸ்கிரீம் விற்பனை நிலையத்தை ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ideal-image

Share This Post

Post Comment