யுத்தத்திற்கு பின் அழியாத சொத்தாக கல்வியே உள்ளது – ஹரி ஆனந்தசங்கரி

ekuruvi-aiya8-X3

Hasankari_1நடைபெற்று முடிந்த யுத்தத்தில் தமிழ் மக்களின் பல சொத்துக்கள் அழிவடைந்த போதும், அழியாத சொத்தாக கல்வியே உள்ளதென கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய நாடாளுமன்ற குழுவில் அங்கம் வகி;க்கும் ஹரி ஆனந்தசங்கரி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் உள்ள கல்வி அறக்கட்டளையினால் பயன்பெறும் மாணவர்களை சந்தித்தார். இதன்போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

Hasankari_2கிளிநொச்சி நண்பர்கள் விருந்தக மண்டபத்தில், யாழ்.வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியலிங்கம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எமது எதிர்காலம் இளைஞர்களின் கையில் என்பதை நிருபித்து காட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Share This Post

Post Comment