வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வாக்களிக்க ஏற்பாடு

ekuruvi-aiya8-X3

srilanka_electionவெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கைப் பிரஜைகள், இலங்கையில் வாக்ககளிக்க தகுதியானவர்கள் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலை உள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் சொந்த நாட்டில் வாக்குப் பதிவுசெய்வதற்கான சட்டங்களை வகுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்குத் தேவையான சட்டங்களை வகுப்பதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைகளம் கூறியுள்ளது.

எதிர்வரும் காலங்களில் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என தேர்தல்கள் திணைகளம் மேலும் தெரிவித்துள்ளது.

Share This Post

Post Comment